how can youtuber predict courts dicision 6829
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் நடைமுறையில் இருந்து வரும் வேளையில், உயரிய சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் சட்ட நடவடிக்கைகளின் இறுதி முடிவைக் கணிக்க முடியாது.
உச்ச சட்டத்திற்கு வெளியே இருக்கும் ஒரு மூன்றாம் தரப்பினர் சமூக ஊடகங்கள் மூலம் நீதியை நிலைநாட்டும், சட்ட அமுலாக்க செயல்முறையின் முடிவுகளை முன்கூட்டியே கணிப்பது ஆபத்தான நிலையாகும்.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஒரு நாட்டினது நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் சரியான முறையில் தான் நடக்கிறது என்பதை மக்கள் நம்ப வேண்டும்.
இதுபோன்ற கருத்து வெளிப்படுத்தல்கள் மூலம் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இல்லாது போகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சுக நலன்களை விசாரிக்க சிறைச்சாலைக்குச் சென்று வரும் வேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக ஒருவர் இந்த சம்பவம் இவ்வாறு தான் நடக்கும் என்பதை முன்கூட்டியே கருத்து வெளியிட்டிருப்பது பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.
இது நீதித்துறையையும் உச்ச சட்டத்தையும் அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
அவ்வாறே இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் அனைவர் மீதும் விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதப்படுகின்றது. அதேபோன்றே இது ஜனநாயகத்தின் மீது வீழ்ந்த ஒரு பெரும் அடி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் என்பது ஒரு ஜனநாயக நாட்டில் அமைந்து காணப்படும் ஜனநாயகக் கொள்கை என்பதால், இந்த விடயத்தில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
என்றாலும், சட்டத்தின் ஆட்சி அமுலுக்கு வருவதற்கு முன்பே, நீதிமன்ற தீர்ப்பொன்று முன்கூட்டியே சமூக ஊடகமொன்றில் நபர் ஒருவர் அறிவிப்பைச் செய்வது கனம் நீதிமன்றத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் குறைமதிப்புக்குட்படுத்தும் செயலாகும்.
சுயாதீன நீதிமன்றம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.





how can youtuber predict courts dicision 6829
மேலும் வாசிக்க :
விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!
முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
