heavy weather warning to trinco and batticalo 5431
இன்று காலை 08:30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:
மட்டக்களப்பு 48.3mm,
நவகிரி 92.0mm,
தும்பங்கேணி 88.0mm,
உன்னிச்சை 46.7mm,
ரூகம் 59.5mm,
வாகனேரி 27.5mm,
கட்டுமுறிவு குளம் 39.0mm.
இதேவேளை இதே காலப்பகுதியில் இலங்கை முழுவதுமாக கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக திருகோணமலையில் 178.0mm மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளள.
இதன் காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் இன்றைய தினம் காலை (19) 106.6 அடிவரை உயர்ந்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 8.00 மணிக்கு சமுத்திரத்தின் 5 கதவுகள் 6 அங்குலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்மட்டம் அதிகரிக்குமாயின் 12 அங்குலங்கள் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தயார் ஆகவும்.
மழைநீர் மூழ்கக்கூடிய பாதைகள் தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடி அவற்றை மூடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும்.
heavy weather warning to trinco and batticalo 5431

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

இன்றும் பல ரயில்கள் சேவையில் இல்லை
