Hearing bussy Anands anticipatory bail appli 7081
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் நகர பொலிஸார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 29ஆம் திகதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் பொலிஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று (03.10.2025) விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது த.வெ.க.வுக்கு தடை கோரும் ரமேஷ் என்பவரின் மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை
அதோடு 7 பொதுநல மனுக்கள் மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த உள்ளது.
அதன்படி இந்த பொதுநல மனுக்களின் விசாரணை முடிந்த பிறகு முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hearing bussy Anands anticipatory bail appli 7081
மேலும் வாசிக்க >>>
விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு! (காணொளி)
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க அனுமதிக்க மாட்டேன் – டிரம்ப்
இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு