harthal against Mullaitivu youths death 6640
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த 32 வயது இளம் குடும்பஸ்தர் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜின் மரணத்திற்கு நீதி கோரி, 2025 ஓகஸ்ட் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுசரிக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓகஸ்ட் 7ஆம் திகதி முத்துஐயன்கட்டுப் பகுதியில் கபில்ராஜ் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், ஓகஸ்ட் 9ஆம் திகதி அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு எதிராகவும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு, ஒரு இலங்கையராகவும் மலையக தமிழராகவும் தனது ஒற்றுமையையும் ஆதரவையும் தொண்டமான் தனது ஊடக அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பின்னரும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நடைபெறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

harthal against Mullaitivu youths death 6640
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
