Saturday, August 30, 2025
HomeLocal Newsஹர்த்தாலின் அழுத்தம் அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்!

ஹர்த்தாலின் அழுத்தம் அரசின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்!

Hartal pressure lead changes government actions 6730

வடக்கு கிழக்கில் நாளை (18) முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலின் அழுத்தம் அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவில் அனைவரின் ஒத்துழைப்பும் வெளிக்காட்டப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலுக்கு ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிகரித்து காணப்படும் இராணுவ பிரசன்னத்திற்கும் அதனூடாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளுக்கும் எதிர்ப்பு வெளியிடும் முகமாகத் தமிழ் அரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு அனைவரது பூரண ஆதரவினையும் வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் இனத்தின் அடக்குமுறைக்கும் இராணுவ அச்சுறுத்தலுக்கும் முடிவினை கொண்டு வர அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும், இதனூடாகத் தமிழினம் மாத்திரமல்ல தமிழ் பேசும் இனங்கள் தொடர்ந்து விழிப்பாக உள்ளன என்பதனை உணர்த்தும் விதமாக ஹர்தால் வடகிழக்கில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த ஹர்த்தாலில் ஊடாக விடுக்கப்படும் அழுத்தம் அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும் எனும் உயரிய நோக்கத்துக்கானது. எனவே தனிநபர் காழ்ப்புணர்வுகளைக் களைந்து இனத்தின் நன்மைக்கான விடயமாகவே இதனைப் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Hartal pressure lead changes government actions 6730

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular