harsha de silva sri lanka parliament election 2948
இலங்கையில் திறன் மிக்க இளம் சமூகம் ஒன்று உள்ளது.
எனினும் அவர்களுக்கான தொழில் முயற்சிகள் அரிதாகவே உள்ளன.
எனவே, எமது அயல்நாடான இந்தியாவின் தென் பிராந்தியம் அண்மைக் காலமாக சர்வதேச ரீதியில் எழுச்சி பெற்று வருவது போன்று இலங்கையையும் முன்னேற்ற முடியும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பொருளியல் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (06) பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!
வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் கடந்த சில தசாப்தங்களில் உலகளவில் பெரும் வளர்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.
அங்குள்ள பல தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
அவர்களை சந்திக்க நேர்ந்த போது, இலங்கை எந்தளவிற்கு பின்னடைந்துள்ளது என்பது புரிந்தது.
இந்தநிலையில் நாளைய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இன்றைய தலைவர்களுக்கு உள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத்தில் வலுவான அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய குரல்கள் ஒலிக்க வேண்டும்.
அந்த வகையில் மீண்டும் எனது நாடாளுமன்ற பிரசன்னம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமையும் என்றும் உறுதி மொழிகிறேன்’ என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பொருளியல் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
harsha de silva sri lanka parliament election 2948









இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை

வீதி புனரமைப்புக்கான நிலுவைத் தொகையை வழங்க அனுமதி
