Group Sri Lankan MPs India study tour 6902
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 25 எம்.பி.க்கள் குழு இந்தியாவின் நாடாளுமன்ற ஆய்வுச் சுற்றுலாவிற்காக சென்றுள்ளது.
இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும், நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் வழக்கறிஞர் ஹன்சா அபேரத்ன உட்பட பல அதிகாரிகளும் அடங்குவர்.
இந்திய நாடாளுமன்றம் தொடர்பான ஆய்வுச் சுற்றுலாவிற்காக இந்தக் குழு சென்றுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசாங்கக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு அண்மையில் சீனாவிற்கு ஆய்வுச் சுற்றுலா சென்று திரும்பிமையும் குறிப்பிடத்தக்கது.