German praise life saving baby found Kurunegala field 6435
குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த தம்பதியொன்றினால் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்து 4 நாட்களேயான சிசு மருத்துனமனையின் தாதியர்களின் அன்பான கவனிப்பின் மூலமாக நலமாக இருப்பதாகவும் மருத்துவ கண்காணிப்புகள் முறையாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த வாரம் வீசிவிட்டுச் சென்ற நிலையில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தையை தத்தெடுக்க உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டிப் போட்ட வண்ணம் இருந்தனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் குழந்தையை அன்பாக அரவணைத்து கவனிக்கும் தாதியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
German praise life saving baby found Kurunegala field 6435


மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!
பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!
தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு
