Gandhi Martin Luthers grandsons statement Gaza 6625
சுதந்திர போராட்டத்தின் இரண்டு முக்கிய புள்ளிகளான மகாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் பேரக் குழந்தைகளான மார்ட்டின் லூதர் கிங் 111, ராஜ்மோகன் காந்தி இருவரும் காசாவுக்காக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (07) வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘இன்று, நாங்கள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல்கள் மட்டுமல்லாமல், காசாவில் நடக்கும் மனிதாபிமான பேரழிவினால் காயமடைந்த ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் பேசுகிறோம்.
காசா குழந்தைகளின் அழுகை எங்கள் இதயங்களை கனமாக்குகிறது.
மேலும் பணயக் கைதிகளாக இருப்பவர்களின் குடும்பங்களின் வலியை நாங்கள் உணர்கிறோம். அது எங்களுடைய வலி.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக்கூடாது.
‘வன்முறையை நான் எதிர்க்கிறேன். அது நன்மை செய்வதாகத் தோன்றினால் அது தற்காலிகமானது. அது செய்யும் தீமையே நிரந்தரமானது’
தொடர் வன்முறை நீதியைக் கொண்டு வராது. துன்பத்தை மட்டுமே அதிகரிக்கிறது.
மேலும் இரத்தகளரிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அவசரமாகவும் அன்புடனும் அழைப்பு விடுக்கின்றோம்.
பணயக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள், மருந்து, தண்ணீர் போன்றவை தடையின்றி சென்றடைய வேண்டும்.
காசாவின் குழந்தைகள் எங்கள் குழந்தைகள். எந்தக் குழந்தையும் பசியை அறியக் கூடாது. இந்தக் கொடுங்கனவு விரைவாக முடிவுக்கு வரவேண்டும்.
சர்வதேச சமூகம் கண்மூடித்தனமாக இருக்ககூடாது. உலக தலைவர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்.
உறுதியான இதயங்களுடனும் திறந்த கரங்களுடனும் ஒரு நியாயமான அமைதி அவசியம் மட்டுமல்ல சாத்தியமானதும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Gandhi Martin Luthers grandsons statement Gaza 6625

மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
