Free eye examination organized Alumni Association 6517
மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது 60 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு கண்பார்வை பரிசோதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து 6 மாணவர்களுக்கான இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளது.
மேலும் 5ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அம்ப்லியோபியா (Amblyopia) கண் பார்வை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கண் பரிசோதனை நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் மாணவராகிய கண் பரிசோதகர் வைத்தியர் துஜேந்திரராஜ் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் மாணவர்களுக்கும், பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் அம்ப்லியோபியா நோய் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான நிக்சன் சில்வெஸ்டர், பாடசாலை முன்னாள் அதிபர் JRP விமல்ராஜ், ஆசிரியர்கள், ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள், சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மைய உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.








Free eye examination organized Alumni Association 6517

மேலும் வாசிக்க :
GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
