Saturday, August 2, 2025

மக்கள் வங்கியின் போர்வையில் மோசடி – வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

Fraud alert Peoples Bank Warning to customers 6541

மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது மக்கள் வங்கி மற்றும் People’s Pay App செயலியின் பெயர்கள், இலட்சினை(Logo)கள் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தப்படும் ஒரு போலி திட்டத்தைப் பற்றிய தகவலாகும்.

மக்கள் வங்கிக்கோ அல்லது People’s Pay App செயலிக்கோ இந்த திட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் குறித்து மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் வங்கியிடமிருந்து வருவதாகக் கூறிக் கொள்ளும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் OTP, கடவுச்சொற்கள், கணக்கு எண்கள், கிரெடிட்/டெபிட் அட்டை எண்கள் மற்றும் CVC/CVV போன்ற உங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களைக் கோரும் எந்தவொரு வெளிப்புற தரப்பினருக்கும் தொடர்புடைய தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு குறித்த அறிக்கையில் வங்கி தரப்பினர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

Fraud alert Peoples Bank Warning to customers 6541

மேலும் வாசிக்க :

https://youtube.com/watch?v=MUM7wk7QOTA%3Ffeature%3Doembed
https://youtube.com/watch?v=AHN_ppwYFrM%3Ffeature%3Doembed

GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular