Friday, August 29, 2025
HomeLocal Newsசம்மாந்துறையில் கஞ்சா மற்றும் சட்டவிரோத பணத்துடன் நால்வர் கைது!

சம்மாந்துறையில் கஞ்சா மற்றும் சட்டவிரோத பணத்துடன் நால்வர் கைது!

Four arrested ganja illegal cash Sammanthurai 6752

கஞ்சாவை விற்பனை செய்த சந்தேக நபர்களையும், தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களையும் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு கஞ்சா மற்றும் ஒரு தொகை சட்டவிரோத பணத்தையும் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த சந்தேக நபர்களை சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை ஊழல் தடுப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கல்லரிச்சல் 01 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், தனமலவில பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், புளக் ஜே மேற்கு 02 பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 350 கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1400 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் மற்றும் பணம் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Four arrested ganja illegal cash Sammanthurai 6752

மேலும் வாசிக்க :

ஹர்த்தாலுக்கு உதவி கோருமுன், முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும் : தமிழரசு கட்சிக்கு சவால்!

காஸாவில் விமானங்கள் மூலம் குண்டு மழை – 21 பேர் உயிரிழப்ப!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10

வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!

கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?

கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular