Friday, February 7, 2025
HomeLocal Newsமாவீரர் தின நிகழ்வு பரப்புரை - ஐந்து பேர் விளக்கமறியலில் - CID & TID...

மாவீரர் தின நிகழ்வு பரப்புரை – ஐந்து பேர் விளக்கமறியலில் – CID & TID தகவல்!

Five people remanded for Heros Day event propaganda 3718

அண்மையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான குறித்த நபர் தமது பேஸ்புக் கணக்கின் ஊடாக மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் போலி பிரசாரம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதன்படி, நேற்று (01) பொரலஸ்கமுவ பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதான குறித்த சந்தேகநபர் கொழும்பு நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!

சீரற்ற காலநிலையால் லாஃப் எரிவாயுக்கு தட்டுபாடு!

பெரிய வெங்காயத்தின் விசேட சரக்கு வரி குறைப்பு!

இதன்போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைதான மற்றுமொரு சந்தேக நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினரால் இணுவில் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராகப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை நேரில் சந்தித்த ஜீவன்!

மன்னம்பிட்டிய பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது!

மாவீரர் தின நிகழ்வு பரப்புரை – ஐந்து பேர் விளக்கமறியலில்…

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள ஏனைய இருவர்களில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும், பதாகைகள், சின்னங்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி உயிரிழந்த உறுப்பினர்களை நினைவுகூருவதில் தடையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இவ்வாறு பரப்பட்ட உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மருதானை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த எல்.ரீ.ரீ.ஈ மாவீரர் நாள் கொண்டாட்டங்களின் பழைய காட்சிகளை இவ்வருட நிகழ்வுகளைப் போன்று பரப்பியதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொது அமைதியின்மையை தூண்டுதல், தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்டனைச் சட்டம் பிரிவு 120 மற்றும் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் சட்டங்களை மீறும் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Five people remanded for Heros Day event propaganda 3718

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரமே!

எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரமே!

காலாவதியான பெருமளவு பொருட்கள் சிக்கின

​​காலாவதியான பெருமளவு பொருட்கள் சிக்கின

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular