Fishing boat caught in storm, man drowns 6404
சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி படகுகளில் ஒரு படகு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது.
பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில் இரண்டு மீனவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், மீதமுள்ள இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
சிலாபம் வெல்ல கொலனி பகுதியை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
ஏனைய இரண்டு படகுகளில் ஒன்று பாறையில் மோதி சேதமடைந்ததுடன், அதில் இருந்த மீனவர்கள் நேற்று இரவு நீந்தி கரை சேர்ந்துள்ள அதேநேரம், அவர்கள் சென்ற மீன்பிடி படகு கருகுபனே மீன்பிடி கிராமத்தில் கரையொதுங்கியுள்ளது.
மற்றைய படகில் இருந்த மீனவர்கள் புயல் காரணமாக படகு கவிழ்ந்ததை அடுத்து முத்துபந்திய மீன்பிடி கிராமத்திற்கு சென்றுள்ளதுடன், பின்னர் அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் சிலாபம் பகுதியை அடைந்தனர்.
இந்த மூன்று மீன்பிடி படகும் சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்றுள்ள நிலையில், காணாமல் போன படகில் இருந்த இரண்டு மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், விமானப்படையின் பெல் 12 ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள விமானப்படை நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், படகு மற்றும் இரண்டு மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள மாகல்ல ஏரியில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவர் ஏரியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் நீரில் மூழ்கியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நிக்கவெரட்டிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் நிக்கவெரட்டிய பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
Fishing boat caught in storm, man drowns 6404


மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!
பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!
தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு
