Friday, February 7, 2025
HomeIndian Newsஇந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

financial allocation srilanka indian budget 5767

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்!

’டொலரை நிராகரித்தால் 100% வரி’’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

சுப்பர் டீசல் விலை நள்ளிரவு அதிகரிப்பு!

இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 1032 கோடியாகும்.

இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய வரவு செலவு திட்டத்தில் வௌிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பூடான் நாட்டுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டுக்காக 2025-26ம் ஆண்டுக்காக 2,150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

financial allocation srilanka indian budget 5767

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

U19 T20 World cup:இந்திய மகளிர் அணி அபார வெற்றி

U19 T20 World cup:இந்திய மகளிர் அணி அபார வெற்றி

வெயங்கொடை களஞ்சியத்தில் 1.5 மில்லியன் கிலோ காலாவதியான உணவுகள்

வெயங்கொடை களஞ்சியத்தில் 1.5 மில்லியன் கிலோ காலாவதியான உணவுகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular