Famous actor injuredset Cinema world shock 6387
Shah Rukh Khan Injury: தனது ‘King’ திரைப்படத்தின் படப்பிடிப்பில், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Shah Rukh Khan Injury: பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவர் ஷாருக்கான். தற்போது அவர் King திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற சித்தார்த் ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவருடன் கடைசியாக ஷாருக்கான் இணைந்து பணியாற்றிய ‘பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருந்தது. ஷாருக்கானின் பதான் திரைப்படத்தை தொடர்ந்து ஜவான் திரைப்படமும் 1000 கோடியை தாண்டியது.
Shah Rukh Khan: 2026இல் வெளியாகும் King திரைப்படம்
இருப்பினும், ராஜ்குமார் ஹிரானியுடன் ஷாருக்கான் இணைந்த டங்கி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் சாதனை செய்யாத நிலையில், ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதால் King திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் டங்கி திரைப்படம் 2023ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. தற்போது தயாராகி வரும் King திரைப்படம் 2026ஆம் ஆண்டில் வெளியாகும் என தெரிகிறது.
ஜப்பானில் வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி!
மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
Shah Rukh Khan: ஷாருக்கானுக்கு காயம்… நிறுத்தப்பட்ட ஷூட்டிங்
இந்நிலையில், King திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும்போது அவருக்கு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வந்தபோது இச்சம்பவம் நடந்துள்து.
Shah Rukh Khan: அமெரிக்காவுக்கு பறந்த ஷாருக்கான்
இதன் காரணமாக, அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றிருப்பதாகவும், அங்கு ஒரு மாதக்காலம் ஓய்வெடுக்க இருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன விதமான காயம் ஏற்பட்படுள்ளது என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே சண்டைக் காட்சிகளில் தீவிரம் காட்டி வருவதால் 59 வயதான ஷாருக்கானுக்கு தசைகளில் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவ்கள் கூறுகின்றன.
Shah Rukh Khan: அக்டோபருக்குள் படப்பிடிப்பு தொடங்கலாம்
இருப்பினும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரியளவிற்கு தீவிரமானது இல்லை என்பதால் கவலைப்பட தேவையில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தற்சமயம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது, அவர் அமெரிக்காவில் காயத்திற்கு சிகிச்சை பெற்று விரைவாக நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மொத்தமாக திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, செப்டம்பர் அல்லது அக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்திரைப்படம் மும்பையின் ஃபிலிம் சிட்டி, கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோ, YRF ஸ்டூடியோஸ் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது.
Famous actor injuredset Cinema world shock 6387


மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!
பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!
தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு