Everyone should be punished like Deshabandhu 6569
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்மொழிந்தார்.
தவறான நடத்தையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, 115 பாராளுமன்ற ஊறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தென்னகோன் குற்றவாளி என்று ஒருமனதாக முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கையாண்டதைப் போலவே தவறு செய்த ஏனையவர்களும் கையாளப்பட வேண்டும்.
ஏனெனில் அவர்கள் குற்றங்களைச் செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
“ஜனாதிபதியின் செயலாளரின் மனைவி பயணித்த வாகனம் பலரை இடித்து காயப்படுத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஜனாதிபதியின் செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இருப்பினும், அது நடக்கவில்லை.
ஜனாதிபதியின் சில பாதுகாப்பு அதிகாரிகள், அரச தலைவருடன் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு திரும்பும்போது மதுபானம் வாங்கியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். தேசபந்துவை நீங்கள் கையாளும் விதத்தில் இந்த நபர்களையும் நீங்கள் கையாள வேண்டும், ”என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கூறினார்.
Everyone should be punished like Deshabandhu 6569

மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
