Friday, February 7, 2025
HomeLocal Newsஉளவு பார்த்த குற்றச்சாட்டிக்ன் பேரில் , சீன ஊடகவியலாளருக்கு 7 வருடம் சிறை தண்டனை!

உளவு பார்த்த குற்றச்சாட்டிக்ன் பேரில் , சீன ஊடகவியலாளருக்கு 7 வருடம் சிறை தண்டனை!

espionage-chinese-journalist-sentenced-7-years-prison

உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் , சீனாவின் அரசு ஊடகம் ஒன்றின் முன்னாள் செய்தியாளர் ஒருவருக்கு, சீனாவின் நீதிமன்றம் ஒன்றினால், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 2022 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 62 வயதான டோங் யுயு என்ற இச் செய்தியாளர், அமெரிக்கா மற்றும் ஜப்பானில் கல்வி மற்றும் செய்தித்தரப்பினருடன் தொடர்புகளை மேற் கொண்டிருந்தார்.

மேலும் , வெளிநாட்டு தூதுவர்களையும் சந்தித்து வந்துள்ளார். இந் நிலையிலேயே, அவர் பீய்ஜிங்கில் ஜப்பானிய தூதரக அதிகாரி ஒருவருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , சீன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் , டோங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய ஐந்து முக்கிய செய்தித்தாள்களில் ஒன்றாகிய குவாங்மிங் டெய்லியின் மூத்த உறுப்பினராக பணியாற்றினார்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!

மேலும் 2022 இல், பீய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் முடிந்த மறுநாள், அவர் கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜப்பானிய இராஜதந்திரியும் தடுத்து வைக்கப்பட்டார்.

இருப்பினும் , பின்னர் ஜப்பானிய அரசாங்கத்தின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல மணி நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, டோங் சந்தித்த இரண்டு ஜப்பானிய இராஜதந்திரிகள், ஜப்பானிய உளவு அமைப்பின் முகவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) வெள்ளிக்கிழமை டோங்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, பீய்ஜிங் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், 1989 இல், தியனன்மென் சதுக்கப் போராட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் டோங்கும் ஒருவராவார்.

அவர், நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார், மேலும் பல ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் வருகை தரு விரிவுரையாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

espionage-chinese-journalist-sentenced-7-years-prison

இதையும் படியுங்கள்

மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!

 ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular