Employment opportunities Sri Lankans many countries 6538
ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன், பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடு இல்லாததால் ஈர்க்கப்பட்ட வளர்ந்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் புதிய அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டதை முன்னிட்டு பத்தரமுல்லையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் நாரஹேன்பிட்டியில் உள்ள மெஹெவர பியச அலுவலகத்தில் இயங்கியதுடன், வெளிநாட்டு சமூகத்திற்கு ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்த பிரிவுகள் பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் நிறுவப்பட்டன.
Employment opportunities Sri Lankans many countries 6538

மேலும் வாசிக்க :
GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
