Monday, February 10, 2025
HomeLocal Newsஇலங்கையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று மாலை முதல் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ, களுத்துறை மாவட்டம் – பேருவளை, கேகாலை மாவட்டம் – கலிகமுவ, குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்கை, களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த, காலி மாவட்டம் – அல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம், கம்பஹா மாவட்டம் – அத்தனகல்லை, கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை, இரத்தினபுரி மாவட்டம் – அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular