Friday, August 29, 2025
HomeForeign Newsஇந்தியாவை கடுமையாக எச்சரித்த டொனால்ட் டிரம்ப் - எரிபொருளால் லாபமீட்டுவதே காரணமா?

இந்தியாவை கடுமையாக எச்சரித்த டொனால்ட் டிரம்ப் – எரிபொருளால் லாபமீட்டுவதே காரணமா?

Donald Trump issued stern warning to India 6566

இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவேன் என அவர் அறிவித்துள்ளார்.

“இந்தியா ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய அளவில் எரிபொருளை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கப்பட்ட எரிபொருளின் பெரும்பகுதியை உலக சந்தையில் மீள் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுகிறது” என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

“இதன் காரணமாக, இந்தியா அமெரிக்காவுக்கு செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்,” என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், வரி உயர்வின் அளவு குறித்து அவர் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Donald Trump issued stern warning to India 6566

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular