Friday, October 17, 2025
HomeLocal Newsகாகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - களுத்துறை பகுதி மக்கள்!

காகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – களுத்துறை பகுதி மக்கள்!

distrubing pet crow in kalutara padukka area 7220

களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

குறித்த காகத்தினால் நாளுக்கு நாள் தொந்தரவுக்கு உள்ளாகும் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தக் காகம் கடைகளுக்கு சென்று எச்சமிடுவதும், மக்களின் உடலில் எந்த பயமும் இல்லாமல் அமர்ந்திருக்கும் பழக்கத்தை கொண்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

distrubing pet crow in kalutara padukka area 7220

இரண்டரை வயதில் 195 நாடுகளை குறித்துக் காட்டி சோழன் உலக சாதனை!

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது!

நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது – முறையான பொருளாதாரத் திட்டமொன்று இல்லை – சஜித் பிரேமதாச!

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

முச்சக்கர வண்டியை முட்டிமோதி கடைத் தொகுதிக்குள் புகுந்த டிப்பர் வாகனம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular