Cyclone forms Pamban low pressure Bay of Bengal 6463
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்தமிழக கடலோரப்பகுதிகள், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
Cyclone forms Pamban low pressure Bay of Bengal 6463


மேலும் வாசிக்க :
விடுதலை விருட்சத்திற்கு நீர் சேகரிக்கும் பணி 8 மாவட்டங்களில் ஆரம்பம்!
குருநாகலில் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசுவுக்கு ஜெர்மனியில் வாழ்வு : தாதியர்களுக்கு பாராட்டு (Video)!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
