Court Appeal special order Lohan Ratwatte petition 3125
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் இராஜரத்ன அந்தக் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், அதற்கான குறுகிய திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க டிசம்பர் 9ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Court Appeal special order Lohan Ratwatte petition 3125
இதையும் படியுங்கள்
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல்

அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் யுக்ரேன் எங்கெல்லாம் தாக்கலாம்?
