களனி ஆற்றின் பிரதான கிளை நதியான மஸ்கெலிஓயாவின் ஒன்பது கிலோமீற்றர் நீளமான கரையின் ஒரு பகுதியில் மீண்டும் காடுகளை வளர்க்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததன் மூலம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் நிலைபெறுதகு தன்மைக்கான பரந்த அளவிலான செயற்பாடுகளுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் விஸ்தரித்துள்ளது.
இதற்காக கொமர்ஷல் வங்கியானது வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (WNPS) முன்முயற்சியான Preserving Land and Nature (Guarantee) Ltd அல்லது PLANT உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன் இதன் மூலம் நிலத்தில் 3,650 செடிகளை நடுவதற்கு கொமர்ஷல் வங்கி நிதியினை வழங்கவுள்ளது. மேலும் இதன் மூலம் வங்கியானது மஸ்கெலிஓயா நீர்வழிப் பாதைக்கு இணையான கீற்றுகள் கார்பன் சுரப்பு வனப் பாதை உருவாக்கம் மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் உள்ளூர் விலங்கினங்களுக்கு நிலையான வாழ்விடத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தனது பங்களிப்பினை வழங்கவுள்ளது.
உருவாக்கப்படவுள்ள வனப் பாதையானது டெல்-கீனா குடு டவுலா கால்-வெரலு மற்றும் கெண்டா உள்ளிட்ட பல பூர்வீக மரங்களை உள்ளடக்கியதாக இருப்பதுடன் மேலும் இருப்பிடத்தின்பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமன்றி உள்நாட்டு சமூகங்கள் மீதான நேர்மறையான விளைவுகளையும் கருத்தில் கொண்டு இந்த திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை நிவர்த்தி செய்வதாகவும் நிலைபெறுதகு தன்மைக்கான முழுமையான அணுகுமுறையாகவும் அமைவதாக வங்கி தெரிவித்துள்ளது.
மஸ்கெலிஓயா மீள் காடு வளர்ப்பு திட்டமானது நாடு முழுவதும் 100,000 மரங்களை நடும் கொமர்ஷல் வங்கியின் ‘மரங்கள் நிறைந்த தேசத்திற்கான’ முயற்சி மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல வனப்பகுதியில் அமைந்துள்ள 100 ஹெக்டேயர் பாழடைந்த வாழ்விடத்தில் மீண்டும் காடுகளை வளர்க்கும் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் அமைந்த மேலுமொரு திட்டமாகும்.
கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி திறன்மிகு முறையில் அமையப்பெற்ற கிளை வலையமைப்புக்கள் மற்றும் 974 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.