coconut oil business has been severely affected 4062
தேங்காய் விலை அதிகரிப்பால் கொப்பரை தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் சுயதொழில் பாரிய அளவில் பலாங்கொடை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் விலை அதிகரிப்பால் வியாபாரிகள் தேங்காய் விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கொப்பரை தேங்காய்காய வைக்கும் வேலையை முற்றாக நிறுத்தியுள்ளனர்.
தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்கு தேவையான கொப்பரை தேங்காய் கிடைக்காததால் தாம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக,தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் ஈடுப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர் வரும் காலங்களில் தேங்காய் எண்ணெயின் விலை உயர்வடைய சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
coconut oil business has been severely affected 4062

இதையும் படியுங்கள்
வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
