Thursday, July 31, 2025
HomeLocal Newsசோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகா!

சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகா!

cholan world record by nuwaraeliya girl kansika 6353

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகா.

நுவரேலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவி கன்சிகா தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறிய அதேவேளை, மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறினார்.

இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திருமதி.திசாநாயக, பாடசாலையின் தலைமை ஆசிரியர் திரு.விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வலயக் கல்வி அலுவலக இயக்குநரும் மற்றும் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

cholan world record by nuwaraeliya girl kansika 6353

மேலும் வாசிக்க :

ஜப்பானில் வரலாற்று சாதனை ப​டைத்த இலங்கை அணி!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

காட்டி ஆட்டத்தை வென்றெடுத்த ஸ்டோக்ஸ்; கில் கோட்டை விட்டது எங்கே?

 நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கர்நாடகாவில் பாம்புகள் சூழ்ந்த மலைக் குகையில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்த ரஷ்ய பெண்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular