cholan world record by abacus student in matale 5582
அபாகஸ் முறை மூலம் 180 பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி 8 வயது மாணவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
மாத்தளை மாவட்டம் கலாதுவெல பகுதியில் வசித்து வரும் தினேஸ்ராஜ் மற்றும் ஷெரின் போன்றோரின் 8 வயது மகனான நிஷ்விக் மாத்தளையில் இயங்கி வரும் எஸ்.ஐ.பி அபாகஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கற்று வருகிறார்.

தொடர் பயிற்சியின் காரணமாக கணக்கிடுவதில் இவருக்கிருந்த வேகத்தினை கவனித்த இவரது ஆசிரியர்களான சக்கரப்பிரியா மற்றும் சுரேந்திரன் போன்றோர் இவரது திறமையை உலக சாதனையாகப் பதிவு செய்ய முடிவெடுத்தனர்.
இதற்கான நிகழ்வு கொழும்பு ஜயா மாவத்தையில் வைத்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது மாணவன் நிஷ்விக் மூன்று மற்றும் இரண்டு எண்களை ஒரு எண்ணினால் பெருக்கியும் மூன்று எண்களை ஒரு எண்ணால் வகுத்தும் 3 நிமிடங்களில் 180 கணக்குகளுக்கு சரியான விடையளித்தார்.

இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா மற்றும் பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷனின் இயக்குநர் க்ளோரன்ஸ் சாமூவேல் போன்றோர் உலக சாதனையாக உறுதி செய்து சாதனை மாணவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த இளம் கணித மேதைக்கு எஸ்.ஐ.பி. அபாகஸ் பயிற்சி மையத்தின் நிர்வாகத் தலைவர்கள் பரிகளித்துப் பாராட்டினார்கள். SIP அபகஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்தவர்களும் சோழன் உலக சாதனை படைத்த மாணவனை வாழ்த்திப் பாராட்டினார்கள்.

cholan world record by abacus student in matale 5582

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை தேவை

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு
