chinas ark peace ship arrives colombo 4345
ஆர்க் பீஸ் (Ark Peace) எனப்படும் சீன கடற்படையின் மருத்துவ கப்பல், நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலானது, இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக இன்று (22) முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை, மரபு ரீதியில் வரவேற்பு அளித்துள்ளது.

மேலும், ஆர்க் பீஸ் கப்பலின் ஊடான மருத்துவ சேவைகளில் இலங்கை கடற்படையின் மருத்துவத் துறையினரும் இணைந்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ கிளினிக்களை வழங்கவுள்ளனர்.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
அதேவேளை, இதன்போது இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவு, கடற்படை, கடல்சார் பீடம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் அதிகாரிகள் பயிற்சி உட்பட இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
அத்துடன், குறித்த கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
chinas ark peace ship arrives colombo 4345

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!
கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?
இந்தியா சீனா இடையே பல சுற்று சந்திப்புகள் – எல்லையில் என்ன நடக்கிறது? சீனாவின் வாக்குறுதியை நம்பலாமா?

தேசிய கணித தினம்: மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தும் ‘கணித’ பயம், காரணம் என்ன?
