Saturday, August 2, 2025
HomeLocal Newsஅரியாலையில் காட்சிப்படுத்தப்படவுள்ள செம்மணி அகழ்வுப் பொருட்கள்!

அரியாலையில் காட்சிப்படுத்தப்படவுள்ள செம்மணி அகழ்வுப் பொருட்கள்!

Chemmani excavation materials exhibited Ariyalai 6544

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் A-9 வீதிக்கு அருகில் செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போது பெறப்பட்ட பொருட்களே காட்சிப்படுத்தப்பவுள்ளன.

அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குச் செய்த விண்ணப்பத்தின் பிரகாரம், நீதிமன்றமானது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025.08.05ஆம் திகதி 13:30 மணிமுதல் 17:00 மணிவரை, மேற்படி உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவற்றைப் பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க இத்தால் பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.

மேற்படி கட்டளையானது. குற்றவியல் நடவடிக்கைமுறை கோவைச் சட்டத்தின் பிரிவுகள் 7 மற்றும் 124இன் கீழ், நீதிவான் என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்ட தற்துணிவின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

The Criminal Investigation Department (CID) submitted a request to the Jaffna Magistrate’s Court seeking permission to conduct a public identification process for the exhumed other evidence. The court granted order for this request.

Accordingly, on Tuesday, August 5, 2025, from 1:30 p.m. to 5:00 p.m., the clothing and other recovered artifacts found alongside human skeletal remains at the Chemmani Ariyalai Siththupaththi Hindu cremation site will be displayed for public viewing.

Members of the public are invited to inspect the items and, if they are able to identify any belongings, to support the ongoing investigation. The order was issued under Sections 7 and 124 of the Code of Criminal Procedure based on the discretion granted to the Magistrate.

Chemmani excavation materials exhibited Ariyalai 6544

மேலும் வாசிக்க :

https://youtube.com/watch?v=MUM7wk7QOTA%3Ffeature%3Doembed
https://youtube.com/watch?v=AHN_ppwYFrM%3Ffeature%3Doembed

GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

Previous article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular