Saturday, February 8, 2025
HomeLocal Newsமுட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

change in egg prices 4134

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை சில்லறை விலையில் 30 முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என அந்த சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்தார்.

55 கிராமுக்கு மேல் உள்ள பெரிய முட்டையை 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையில் வாங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் பெரும்பாலும் இந்த விலைக்கே முட்டைகள் கிடைப்பதாகவும், முட்டைகளை இந்த விலைக்கு மேல் வாங்க வேண்டாம் எனவும் நுகர்வோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.மேலும் கருத்துத் தெரிவித்த என்டன் அப்புஹாமி,

வரும் பண்டிகை காலத்தில் முட்டையை 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.

இலங்கை ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு! 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோழனின் நிவாரணம்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

எனவே, இன்று முதல் அனைத்து சில்லறை கடைகளிலும் முட்டையை 35 ரூபாய்க்கு குறைவாக விற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஒரு முட்டை 65-70 விலையில் இருந்தது.

ஆனால் முட்டை உற்பத்தி அதிகரித்து சந்தையில் இன்று விலை நிலையாக உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் முட்டை உற்பத்தி உபரியாக உள்ளது.

50 கிராம் முட்டையை 30 ரூபாய் முதல் 32 ரூபாய்க்கு பெறலாம்.55 கிராமுக்கு மேல் உள்ள முட்டைகள் 33..34..35. ஆகிய விலைகளில் வாங்கலாம். அதற்கு அதிகமாக விற்றால் அதனை வாங்க வேண்டாம்” என்றார்.

change in egg prices 4134

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

கருங்கடலில் ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்கள் சேதம் – கிரைமியா அருகே என்ன நடந்தது?

 ரஷ்யா

இந்தியாவின் ‘ஹாங்காங்’ திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?

கிரேட் நிகோபார், இந்தியாவின் ஹாங்காங் திட்டம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular