Monday, February 17, 2025
HomeIndian Newsஇந்தியாவில் 48 மணித்தியாலங்களுக்குள் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

இந்தியாவில் 48 மணித்தியாலங்களுக்குள் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோவிற்கு 211 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் உட்பட 10 விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் ஊடாக கடந்த 48 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து பல்வேறு விமான நிலையங்களில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெய்ப்பூரில் இருந்து அயோத்தி வழியாக பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தர்பங்காவிலிருந்து மும்பை செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாக்டோக்ராவிலிருந்து பெங்களூரு செல்லும் ஆகாசா ஏர் விமானம், டெல்லியில் இருந்து சிக்காகோ செல்லும் ஏர் இந்தியா விமானம், தம்மாமில் இருந்து சவூதிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அமிர்தசரஸில் இருந்து டேராடூனுக்கு பயணித்த எலையன்ஸ் ஏர் விமானம் மற்றும் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகியவற்றுக்கும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அச்சுறுத்தல்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை இந்திய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular