Batticaloa Amirthakazhi Sri Mamangeswarar Festival 6448
ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடியமாவாசை தீர்த்த திருவிழா இன்று (24) இடம்பெற்றதுடன் பூஜை நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தொடர்ந்து 10 நாட்களாக இடம்பெற்றதுடன் நேற்று (23) தேர்த்திருவிழா மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடபெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு மாமாங்கேஸ்வரப் பெருமானின் அருளாசியைப் பெற்றுக்கொள்ள நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் வௌிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் வரலாறு என்னவெனில், இராமன் சீதையை மீட்பதற்கு இலங்கை வந்த நேரம் வழிபடுவதற்காக பிரதிஸ்டை செய்த லிங்கம் இந்த ஆலயத்தில் மூல மூர்த்தியாக உள்ளது.

அத்துடன் ராமபக்த ஹனுமான் தனது வாலில் வைக்கப்பட்ட தீயினால் இலங்கையை எரித்துவிட்டு அதனை அணைத்த குளமே (கேணி) இன்று அவ்வாலயத்தின் தீர்த்த குளமாக பயன்படுத்தப்படுகிறது.
மூல மூர்த்தி சிவனாக இருந்த போதும் பிள்ளையாரை முன்னிலைப்படுத்தி அமையப் பெற்றிருப்பதால் இது மாமாங்க பிள்ளையார் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது.

Batticaloa Amirthakazhi Sri Mamangeswarar Festival 6448


மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!
பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!
நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!
தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு
