baticalo pulatisi stoped employes protest 5604
மட்டக்களப்பில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்படவிருந்த புளத்திசி ரயில், ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக திடீரென இடைநிறுத்தப்பட்டது.
இதன்காரணமாக நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
வாரயிறுதி நாள் என்பதால் பெருமளவான பயணிகள் பேருந்துகளை எதிர்பார்க்காது ரயில் பயணத்தை நாடியுள்ளனர்.
ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டதை அடுத்து பயணிகள் மட்டக்களப்பு ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.
இதுகுறித்து தெரியவருவதாவது, ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் தங்களுக்கான தங்குமிட வசதிகள் கல்லோயாவில் உரியவகையில் வழங்கப்படாமை காரணமாக அதனை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்கூட்டிய அறிவிப்பின்றி அவர்கள் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் நிறைய அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரயில்வே தலைமையகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், முன்பதிவு செய்யப்பட்ட 700க்கும் மேற்பட்ட ரயில்வே பயணச் சீட்டுகளுக்கான பணத்தை உரியவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.

baticalo pulatisi stoped employes protest 5604

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!