attack on a disabled candidate 2825
மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் ஒருவர் மீது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில், சம்பவ தினத்தன்று பகல் ஒரு மணியளவில் வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வவுனியா இரட்டை கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
அறுகம்பை தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது!
அதன் பின்னர், வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் பெரும்பான்மை இன கட்சியில் போட்டியிடக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதனையடுத்து, வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியே வந்தபோது, அவருக்கும் ஆதரவு கேட்டு வந்த கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
attack on a disabled candidate 2825
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!
லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கூரிய ஆயதத்தால் தாக்கி ஒருவர் கொலை
