Angaja father Ramanathan tried attack new MP 5265
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான ராமநாதன் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட காணொளியொன்று வைரலாகி வருகின்றது.
ராமநாதன் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமில்லாத பலரது காணிளை அத்துமீறி தன்வசப்படுத்தியுள்ளார் என்று தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம்சுமத்துகிறார்.
மடுவில் நீராடச் சென்ற இளைஞனை காணவில்லை!
இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகார தோரணையில் பதிலளிப்பது மட்டுமல்லாமல், ஓரிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்குவதற்கு முயற்சிப்பதும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில், குறித்த வாக்குவாதம் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்றதாகவும், அந்த தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வௌியாகிய பின்னர் எமது செய்திச் சேவையை தொடர்பு கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் முன்னாள் செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட சீலன் என்பவர் இந்த விடயத்தை எமக்குத் தெரிவித்தார்.
இந்த காணி விவகாரம் தொடர்பாக சதாசிவம் ராமநாதன் என்பவரின் முறைப்பாட்டுக்கு அமைய காங்கேசன்துறை பொலிஸ் நிலையில் கடந்த 2024-05-11 அன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் முறைப்பாட்டு பதிவு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி சர்ச்சைக்குரிய காணி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் செயலாளர் சீலன் குறிப்பிட்டார்.
அதற்கான பதிவையும் அவர் எமக்கு சமர்ப்பித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பலமுறை தொடர்பு கொண்ட போது, அவரது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Angajan father Ramanathan tried attack new MP 5265

இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

தை பிறந்தால் வழி பிறக்கும் – இன்று தைப்பொங்கல்!
நன்றி செலுத்துதல் என்ற பாடத்தை கற்பிக்கும் தைப்பொங்கல்
