Thursday, July 31, 2025
HomeForeign Newsஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு - பங்களாதேஷில் பாடசாலை மீது விமானம் வீழ்ந்து...

ஏர் இந்திய விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு – பங்களாதேஷில் பாடசாலை மீது விமானம் வீழ்ந்து விபத்து!

AirIndia plane tires burst Bangladesh crashes 6410

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A320 விமானம் பிரதான ஓடுபாதை 27 இல் இருந்து விலகி செப்பனிடப்படாத பகுதிக்குள் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்ட போதிலும் விமான நிறுத்துமிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது.

ஓடுபாதையில் இறங்கும்போது விமானத்தின் மூன்று சில்லுகளும் (டயர்கள்) வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, இரண்டாம் நிலை ஓடுபாதை செயல்படுத்தப்பட்டுள்ளது,” என்று மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தரையிறங்கிய பின்னர் ஏர் இந்திய விமானம் ஓடுபாதையில் இருந்து 16 முதல் 17 மீட்டர் தூரம் விலகிச் சென்றது, ஆனால் பாதுகாப்பாகத் திரும்பி விமான நிறுத்துமிடத்திற்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலை 9.27 மணிக்கு கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் AI-2744 தரையிறங்கிய போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) குழு விமான நிலையத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் உள்ள பாடசாலையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷின் டாக்காவில் பயிற்சியின் போது, அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI விமானம் பாடசாலையில் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AirIndia plane tires burst Bangladesh crashes 6410

மேலும் வாசிக்க :

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!

வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!

புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூடு : கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular