air india plane bird attack heading colombo 7122
இலங்கைக்கு பயணித்த போது பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் சென்னை வரை மீண்டும் செலுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொழும்பு விமான நிலையத்தில் எயார் இந்தியா விமானம் தரையிறங்கும் போது பறவை மோதி சேதமடைந்து இருந்துள்ளது.
பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியது.
சென்னையிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திற்கு எயார் இந்தியா விமானம் இன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 164 பேர் பயணித்தனர். விமானம் அதிகாலை 1:55 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கிய பின் விமானத்தை பராமரிக்கும் குழுவினர் பரிசோதித்த போது அதிர்ச்சியடைந்தனர்.
விமானத்தின் மீது பறவை மோதி உயிரிழந்ததை பொறியாளர்கள் கண்டறிந்தனர்.
பறவையின் உடலை வெளியே எடுத்த பின், பறவை எங்கு மோதியது என ஆய்வு செய்துவந்தனர்.
இதன் பின்னர் மீண்டும் கொழும்பு விமான நிலையத்தில் பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியது.
அந்த விமானத்தை ஆய்வு செய்த பொறியாளர்கள், விமானம் பறப்பதற்கான தகுதியற்றது என அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து விமானம் முழுவதையும் சோதனை செய்யும் நடவடிக்கையில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
air india plane bird attack heading colombo 7122