Saturday, October 18, 2025
HomeForeign Newsசீன விமானத்தினுள் நடுவானில் தீ பரவல் - லித்தியம் மின்கலம் வெடிப்பு!

சீன விமானத்தினுள் நடுவானில் தீ பரவல் – லித்தியம் மின்கலம் வெடிப்பு!

Air China flight diverted battery fire cabin 7224

எயார் சீனாவின் வணிக பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்ததன் காரணமாக பாதுகாப்பாக ஷாங்காய்க்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (18) முற்பகல் பயணி ஒருவரின் பயண கைப் பொதியில் வைக்கப்பட்டிருந்த லித்தியம் மின்கலம் ஒன்று வெடித்ததன் காரணமாக தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீன நகரமான ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு அருகிலுள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தினசரி பயணிகள் விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“CA139 விமானத்தில் மேல்நிலைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் ‘கேரி-ஆன் லக்கேஜில்’ லித்தியம் மின்கலம் தன்னிச்சையாக தீப்பிடித்தது” என்று விமான நிறுவனம் சீன சமூக ஊடக தளமான வெய்போவில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“விமான பணிக் குழாமினர் உடனடியாக நிலைமையை நடைமுறைகளின்படி கையாண்டனர், யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக”, ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்திற்காக விமானம் திருப்பி விடப்பட்டது.

விமானத்தினுள் கரும்புகை சூழ்ந்த நிலையில், தீயை அணைக்க விமானப் பயணி ஒருவர் முயற்சிப்பதை காணொளி சித்தரிக்கின்றது.

Air China flight diverted battery fire cabin 7224

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular