After India Tik Tok is also banned in the US 5414
அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
‘டிக் டொக்’ எனப்படும், கைப்பேசி செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது.
இந்த தடை இந்த வார இறுதியில் அமுலுக்கு வருகின்றது.
இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தி்ல் டிக் டொக் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.
இதனால், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
After India Tik Tok is also banned in the US 5414


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து
