actor Ajith comes will crowd Vijay 7000
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை ஆரம்பித்தார்.
அதன்படி, நேற்று காலை நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார்.
இதையடுத்து, விஜய் பிரசாரத்துக்காக வடிவமைக்கப்பட்ட நவீன ரக பேருந்தில் ஏறி, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்:-
இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம்.சச்சினுக்கு விருது தரும் போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை தான்.
திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும்.
நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
actor Ajith comes will crowd Vijay 7000
மேலும் செய்திகள் >>>
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!
இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!
வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு – கனடாவில்!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!