action taken valaichchenai four arrested 4930
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்று (05) வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 போதை மாத்திரைகள், 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஓட்டமாவடி பிரதேச பெண்கள் பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 32 வயதுடைய ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
ஏனைய மூவரும் 15 வயது மற்றும் 30, 31 வயதுடையவர்கள் என்பதுடன், நால்வரும் ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.
கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
action taken valaichchenai four arrested 4930


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ்
