Saturday, February 8, 2025
HomeLocal Newsதிடீரென அதிகரித்த அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம்!

திடீரென அதிகரித்த அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம்!

அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (22) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒரு கிலோ நாட்டு அரிசிக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலை உள்ள போதும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால், இந்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாது என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரிசி நெருக்கடி, தேங்காய் மற்றும் முட்டை விலை உயர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular