sajith premadasa critisied government economy 7203
பராட்டே சட்டத்தின் மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்களின் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகளுக்கு இன்னும் எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டமொன்று இல்லாமையினால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சமூகத்தை ஒரு பிரமிட்டாக கருதினால் அதன் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, நாட்டில் எல்ல மட்டத்திலும் எல்லா வகையிலும் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50% ஆக அதிகரித்து காணப்படுகின்றன.
2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும். 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும்.
நமது நாட்டிற்கு கிட்டும் அந்நிய செலவாணி உயர் மட்டத்தில் அமைந்து காணப்பட வேண்டும்.
இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5% பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போதுமான மட்டத்தில் அமைந்து காணப்படவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வறுமை அதிகரித்து, மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு குறைந்து வருகின்றன.
நுகர்வு, முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேமிப்பு என்பன குறைந்து வருகின்றன. இவை அனைத்தையும் உயர் மட்டத்தில் பேணி வர, பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
sajith premadasa critisied government economy 7203