Tuesday, October 14, 2025
HomeLocal Newsஜனாதிபதி தலைமையில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள்!

ஜனாதிபதி தலைமையில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள்!

home ownership deeds for hill community 7195

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டத்தின் 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு்ள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா!

தேசிக்காய் விலை உச்சம்!

இலங்கையில் முட்டைக்கு வந்த ​சோதனை விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை!

இந்த வீட்டுத் திட்டம் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த வீடுகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையின் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

வலையொளி இணைப்பு அததெரண:-

home ownership deeds for hill community 7195

https://adaderanatamil.lk/news/cmgnbia9400y3qplpzn52d1sl

மேலும் செய்திகள் >>>

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!

வெளிநாட்டுப் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இரு சாரதிகள் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில்!

‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular