Tuesday, October 14, 2025
HomeLocal Newsகச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்!

கச்சத்தீவில் தஞ்சமடையவுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்!

tamilnadu fishermen seek refuge katchatheevu 7190

இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து கடற்றொழில் குடும்பத்தினரும் படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக விசைப்படகு கடற்றொழில் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி நேற்று (11.10.2025) இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது.

சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா!

தேசிக்காய் விலை உச்சம்!

இலங்கையில் முட்டைக்கு வந்த ​சோதனை விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை!

இலங்கை சிறையில் தவிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி கடற்றொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பிரதமர் நினைத்தால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி நேற்று (11.10.2025) இடம்பெற்ற போராட்டத்தில் ஏராளமான கடற்றொழிலாளர்களும், கைதான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 8 ஆம் திகதி 30 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilnadu fishermen seek refuge katchatheevu 7190

மேலும் செய்திகள் >>>

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!

வெளிநாட்டுப் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இரு சாரதிகள் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில்!

'தொட்டலங்க கண்ணா'வுக்கு ஆயுள் தண்டனை

‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular