Tuesday, October 14, 2025
HomeCinema Newsதேனிசைத் தென்றல் தேவாவுக்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை!

தேனிசைத் தென்றல் தேவாவுக்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை!

historic honour for ThenIsai Thendral Deva 7062

அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலை கரங்களில் தந்தமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை அவுஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் அண்மையில் கெள‌ரவித்தது.

அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேவா கூறியதாவது: “அவுஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு.லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செப்டம்பர் 24ம் திகதி மாலையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது.

இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.

எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய‌ பலமாக இருந்து வருகிறது.

இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

A historic honour for #ThenIsaiThendral #Deva!

During his visit to Australia, Deva was welcomed at the Australian Parliament, invited to sit in the Speaker’s chair, and presented with the ceremonial scepter

Deva expressed heartfelt gratitude to the Australian Government, the Tamil Arts & Cultural Centre, his fellow musicians, and his beloved fans.

historic honour for ThenIsai Thendral Deva 7062

மேலும் வாசிக்க >>>

விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு! (காணொளி)

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க அனுமதிக்க மாட்டேன் – டிரம்ப்

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் சீனாவின் மூலோபாயப் பங்களிப்பு

தேசிய விருதுகளை பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular