Tuesday, October 14, 2025
HomeIndian Newsநடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்- விஜய்

நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்- விஜய்

tvk vijey tamil nadu election compainge 6991

திருச்சி மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை ஒவ்வொன்றாக குறிப்பிட்டு செய்தீர்களா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான், திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில்தான் எனவும் அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான் என விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கி, மரக்கடை பகுதியில் இன்று உரையாற்றினார்.

காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின் பிரசார வாகனம், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் கடுமையான தாமதத்தை சந்தித்தது.

விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரையிலான 3 கி.மீ. பயணம் மட்டும் 2 மணி 45 நிமிடங்கள் ஆனது, மொத்தம் 5 மணி நேரம் ஆகியது.

தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வாகனத்தை புடைசூழ, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. போலீஸ் அனுமதி 10:30 முதல் 11:00 மணி வரை 30 நிமிடங்கள் மட்டுமே என இருந்தாலும், தாமதத்தால் உரை நேரத்தை கடந்து நடைபெறுகிறது.

பிரச்சாரத்தில் பேசிய அவர் “அந்த காலத்தில் போருக்கு செல்பவர்கள் குலதெய்வகோவிலுக்கு சென்றுவிட்டு தான் போருக்கு செல்வார்களாம்.

அந்த மாதிரி அடுத்தவருசம் நடக்க போகின்ற தேர்தலில் போட்டியிட தயாராவதற்கு முன்னதாக நம்ம மக்கள் எல்லாரையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணைத்தொட்டால் மிகவும் நல்லது.

சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மாதிரி தான் திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும்.

அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அறிஞர் அண்ணா அவர்கள் முதன் முதலாக தேர்தலை நிற்கவேண்டும் என்று விரும்பினார்.

அதன்பிறகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அவருடைய முதல் மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார். அந்த மாதிரி திருச்சிக்கு என்று தனி வரலாறு அதிகமாக இருக்கிறது.

அதற்கு பிறகு நம்மளுடைய கொள்கை தலைவர் பெரியார் அவர்கள் வாழ்ந்த இடம் மலைக்கோட்டை இருக்கும் இடம்..கல்விக்கு பெயர்போன இடம் மதசார்பினத்திற்கும் பெயர் பெற்ற இடம்” என தெரிவித்தார்.

அத்துடன் விஜய் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். ‘மாணவர்களின் கல்விக் கடன் ரத்து’ என்ற வாக்குறுதி என்ன ஆனது? ‘டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு’ என அளித்த உத்தரவாதம் என்ன நிலை? ‘அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு’ என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை என விஜய் புகார் அளித்தார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மக்களை ஏமாற்றியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.

tvk vijey tamil nadu election compainge 6991

மேலும் செய்திகள் >>>

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!

இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!

புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு – கனடாவில்!

புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular