company fined overcharging waterport city 6775
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்த கொழும்பு துறைமுக நகரில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் ரூ.70 விலை கொண்ட குடிநீர் போத்தலை ரூ.200க்கு விற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (20) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜூலை 16 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் தொடர்புடைய வர்த்தக நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த தருணத்தில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தில் 500 மில்லிலீற்றர் போத்தல் குடிநீர் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
01.04.2025 அன்று வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி உத்தரவின்படி, 500 மில்லிலீற்றர் போத்தல் குடிநீர் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) ஆகியவற்றின் கீழ் ரூ.200க்கு விற்பனை செய்வது குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
company fined overcharging waterport city 6775
மேலும் வாசிக்க :
ஹர்த்தாலுக்கு உதவி கோருமுன், முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும் : தமிழரசு கட்சிக்கு சவால்!
காஸாவில் விமானங்கள் மூலம் குண்டு மழை – 21 பேர் உயிரிழப்ப!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
