Prime minister Harini Warns Government Servents 6686
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்ட கூட்டங்களுக்கு வரும் அதிகாரிகள் தகவல்கள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன் வழங்க வேண்டுமென அவர்
தெரிவித்துள்ளார்.
எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி வெறுமனே தகவல்களை வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முறையான ஆயத்தங்கள் எதுவுமின்றி அதிகாரிகள் கூட்டங்களுக்கு வரக் கூடாது என பிரதமர் அறிவித்துள்ளார்.
முக்கியமான அபிவிருத்தி கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகள் வெறுமனே கூட்டங்களில் பங்கேற்கும் நோக்கில் வருவதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுகின்றன.
அண்மையில் பிரதமரினால் செய்மதி ஒன்று தொடர்பில் நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்சவின் மேற்பார்வையில் விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரீம் செட் என்னும் செய்மதி தொடர்பில் ஹரினி அமரசூரிய தகவல்களை வழங்கியிருந்தார்.
இந்த தகவல்கள் ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
Prime minister Harini Warns Government Servents 6686
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
